Online கற்பித்தலை சாத்தியமாக்குவது எப்படி?

இன்று Covid-19 காரணமாக மாணவர்களின் கல்வி நிலை வெகுவாகப் பாதித்துள்ள நிலையில், பல ஆசிரியர்கள் Online வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களையும், பெற்றோரையும் பல மனவுளைச்சல்களுக்கு உள்ளாக்குகின்றமை உண்மை. அவ்வாறெனில் Online வகுப்புக்கள் சாத்தியமற்றவையா? அல்லது அதனைச் சாத்தியப்படுத்துவது எவ்வாறு?

முதலில் Online கற்பித்தல் முறைகள் பற்றிய பூரண அறிவு ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.. அந்தந்தப் பாடசாலைகள் தமது மாணவர்களிடம் துள்ளியமாகத் தகவல்களைத் திரட்டி அவர்கள் கற்க விரும்பும் ,சாத்தியமான Online முறைகளை அறிய வேண்டும். Whatsapp, Zoom, Google form, Telegram,FB, Fb live,twitter , சாதாரண தொலைப்பேசி என்பவற்றினூடாக கற்பித்தலுக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, தரவட்டங்களை அமைப்பதோடு, பாடசாலைக்கான Youtube Channel, FB page ஐயும் கட்டாயம் உருவாக்கி தொடர்ந்தும் அதை செயற்படுத்த ஆசிரியர்கள் சிலரை நியமிக்க வேண்டும்.. அனைத்துக் குழுவிலும் அதிபர் தலைமைப் பொறுப்பில் இருந்து வழி காட்ட வேண்டும். கற்பித்தல் ஒரு முறையினூடாக மாத்திரமன்றி மேற்சொன்ன அனைத்து முறைகளிலும் நடத்தப்படல் வேண்டும்..

Online கற்பித்தலில் அதிபரின் பங்கு முக்கியமானது. மேற்சொன்ன விடயங்களை நன்கு திட்டமிடுவதோடு , மிக முக்கியமான செயற்பாடாக பெற்றோரையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.. Online கற்றலில் ஈடுபட முடியாத மாணவர்களின் பட்டியலைத் திரட்டி, SDC, பெற்றோரின் உதவியுடன் Online கற்றலில் ஈடுபடமுடியாதுள்ள மாணவர்களை, அருகாமையிலுள்ள Online கற்றலில் பங்கு பற்ற முடியுமான மாணவர்களுடன் இணைந்து கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தல் வேண்டும்.


முடியுமானளவு ஊரிலுள்ள செல்வந்தர்கள், நன்கொடையாளர்கள், நலன் விரும்பிகளின் உதவியுடன் தமது பாடசாலை மாணவர்களுக்கு data சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தல் வேண்டும்..

தத்தமது பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், படித்த இளைஞர் -யுவதிகளையும் பாடசாலைக் கல்வி நடவடிக்கைக்குள் இணைத்து ஒவ்வொரு வகுப்பாசிரியரின் கீழும் அவர்களுக்கான வழிகாட்டல்களைக் கொடுத்து கற்றல்- கற்பித்தலுக்கான அவர்களின் பங்களிப்பைப் பெற்றூக் கொள்ளல். ( ஒவ்வொரு வகுப்புக்குமான செயலட்டைத் தயாரித்தல், Youtube, fb page, whatsapp குழு, Twitter, Zoom மற்றும் ஏனைய தொழிநுட்ப உதவிகள் )

தாம் கற்பிக்கும் விடயங்கள், எதிர்நோக்கும் சவால்கள் பற்றி வாரம் ஒரு முறை Zoom இனூடாக கூட்டம் கூடி ஆசிரியர்கள் கலந்துரையாடி குறைகளை இழிவளவாக்க முயற்சி செய்தல் வேண்டும்..

திட்டமிடப்பட்ட அட்டவணையினூடாக கற்பித்தலை மேற்கொள்வதோடு , பயிற்சிகளை அன்றைய தினமே திருத்தி Online ஊடாகவே வழங்கி, சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை ஒன்லைன் சான்றிதழ்களும் வழங்குதல்...

அத்துடன் ஒன்லைன் மூலமான போட்டிகளையும் வாரா வாரம் நடாத்தி மாணவர்களுக்குப் பரிசில்களையும் , சான்றிதழ்களையும் வழங்குதல்.. Youtube chanel இலும் மாணவர்களது திறமைகளைப் பதிவேற்றி மாணவர்களை உற்சாகப்படுத்துதல்..

இவ்வாறு ஆசிரியர் திட்டமிட்டு Online கற்பித்தலை மேற்கொள்ளும் போதும் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஒரு நண்பனாக செயற்படும் போதும் Online கற்பித்தலை சாத்தியப்படுத்தலாம்..

ஆனால் இதில் மிக முக்கியம் ஆசிரியர்களது ஒற்றுமையும், தியாக மனப்பாங்கும் , அதிபரின் தூரநோக்கான திட்டமிடலுமாகும்.

பாடசாலைச் சமூகத்தின் சரியான திட்டமிடலும், கடின உழைப்புமே இதனைச் சாத்தியப்படுத்தும்.


இம்தியாஸ் சாஹுல்.