மட்டக்களப்பு களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகனின் ஆலய #வரலாறு

தட்சன் கைலாயம் என புராண இதிகாசங்களில் வர்ணிக்கப்பட்டு புகழ் பெற்று விளங்கும் இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணத்தில் மட்டு மாநகரின் தெற்கே கல்முனை வீதியில் 23 கிலோ மீற்றர் தூரத்துக்கப்பால் வெற்றிலைச் செய்கையும் செந் நெல்லும் பயிர்களும் விளைகின்ற பரந்து விரிந்துள்ள பழம் பெரும் கிராம்மான களுதாவளைக் கிராமத்தின் வடமேற்கே மூலையில் சுயம்புலிங்கப் பிள்ளையாரும் கிராமத்தின் தெற்கே களுதாவளை சிவசக்தி முருகனும் களுதாவளைக் கிராமத்தின் இரு கண்களாக இருந்து அருள்பாலித்து வீற்றுருக்கின்றனர்.

இவ் முருகன் தலமானது ஆரம்பத்தில் சில்லென்ற ஓசையை ஒலிக்கும் சில்லூறுகளின் நாதம் காதைப் பிளக்க தென்றல் காற்றின் இதமான அரவணைப்பு உள்ளத்தை தடவ கம்பீரமாக்க் காட்சியளிக்கும் தென்னம் சோலைகளும் பிரப்பம் காடுகளும் நாவல் மரங்களும், திருக்கொன்றை மரங்களும் ஆலை மரங்களும் அரசை மரங்களும் மருதமரங்களும் தாமரை நிறைந்த தடாகமும் காடுகளால் சூழப்பட்ட ஏகாந்தமான அமைதியான இடத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி உள்ளார். இத் தலத்தின் கங்கையிலே திருநீறு விளைவதால் திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் என்றும் காரணப் பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றது அத்துடன் காடுகள் நிறைந்து காணப்பட்டதால் காட்டுக் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது

  1. தோற்றம்

அக்காலத்தில் வாழ்ந்த கந்தப்பர் திருமணம் முடியாமல் பிரமச்சரிய வாழ்கை வாழ்ந்து வந்து முருகன் மீது பக்தியும் அளவு கடந்த அன்பும் கொண்டவராகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் கதிர்காம தலத்திற்கு அடிக்கடி யாத்திரை செல்பவராகவும் விளங்கினார். அவருடைய கனவிலே “ கந்தப்பா நீ கதிர்காம் வந்து தொல்லைபடுத்தாதே “ நீ இருக்கும் தென்னந் தோட்டத்திலே நான் விக்கிரகம் மண்ணில் புதையுண்டு இருக்கிறேன் அதை அங்கே வைத்து பூசை செய் என்ற முருக வடிவிலான ஓர் உருவம் கனவிலே தோன்றியது. அவர் காலை எழுந்து வெறும் கனவுதானே என சந்தேகத்துடன் கனவிலே கண்ட இடத்தை தோன்டி பார்த்தபோது அதிர்ந்து போய் புதையுண்டிருந்த அந்த முருகன் சிலையை எடுத்து பசும் சோலையா விளங்கும் இத்தலத்திலே வைத்து வணங்கி வந்தார். அவரது தம்பி சின்னத்தம்பி என்பவரும் இனைந்து அவ் விடத்தில் நாவல் குழைகொண்டு கொத்து பந்தல் இட்டு ஆலயம் அமைத்து வழிபட்டனர் .

  1. இன்றைய நிலை-

இவ்வாலயம் ஆகம முறைப்படி மூர்த்தி தலம் தீர்தம் என முச்சிறப்புகளும் கொடிக்கம் வைக்கப்பட்டு பிள்ளையார், விஸ்னு, வைரவர் நவக்கரகம் வைரவர் என பரிவாரத் தெய்வங்ளும் பெரும் ஆலயமாகவும் காணப்படுகின்றது

  1. தீர்த்தம்

மகோற்சவ திருவிழாவில் ஆடித்திருவோண நட்சத்திரத்தில் திருநீற்றுக் கேணியில் தீர்தம் இடம் பெறும் மற்றும் கார்திகை விசேட விரதங்கள் அனைத்தும் இங்கே இடம் பெறும்

அற்புதங்கள்- அவர் அவர் நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்பட்ட விடயங்கள் .. பிள்ளை பேறுகள் இல்லாதோர் முருகனே கதி என்று

கந்த சஸ்டி விரதம் முறையாக அனுஸ்டித்து இறுதியில் சூரன் போர் நிறைவு பெற்றதும் பெருமானுக்கு படைக்கப்பட்ட  மாங்கனிகளை பிள்ளை பேறுகள் இல்லாதோர் உண்டால் பிள்ளை பேறுகள் கிடைத்த அற்றபுதங்கள் இடம் பெற்று இருக்கின்றன

இங்கு முருகனுக்கு அன்று தொடக்கம் இன்று வரை படைக்கின்ற உள் அமுது மிகவும் விசேடமானது..

  1. இறந்தவர்களுக்கான புரட்டாதி மாத பிதிர் கடன் செய்வதற்கான சிறந்த தலமாகவும் காணப்படுகின்றது

முருகப்பெருமானின் அருகினில் வீரம்மாகாளிம்மன் ஆலயமும் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது