பிறப்பு:4 மே 1937, பிறை, பினாங்கு
பெற்றோர்: அப்பா: பி. கருணாகரன் அம்மா: அம்மாக்கண்ணு (மூன்று வயதில் தாய் இயற்கை எய்தினார்)
சின்னம்மா: கோவிந்தம்மாள்
உடன்பிறப்புகள்: க. தாமோதரன் (அ), க. இராமச்சந்திரன். க. பாஸ்கரன் (அ), க.விஜயன் (அ), க. சகுந்தலா (அ), க. ஜானகி, க. இராகவன் (அ).
குடும்பம்:
துணைவி: புவான்சிறீ டத்தின் வசந்தா சேதுராமையர்
பிள்ளைகள்: கு. அருட்செல்வி (விரிவுரையாளர், மாரா பல்கலைக் கழகம், சிரம்பான்)
கு. அருட்செல்வம் - சீமா நாயர் (தொழில் முனைவர்)
மருத்துவர் கு. அருளாளன் - கமலவல்லி
வழக்கறிஞர் கு. அருணன் - அலினா
பெயரப்பிள்ளைகள்: அசுவின் அருட்செல்வம், அஞ்சலி அருட்செல்வம், அரவிந்தன் அருளாளன், அய்சுவர்யா அருளாளன்
கல்வி:
பள்ளிக்கூடம்: இராமநாதன் தமிழ்ப்பள்ளிக்கூடம், புக்கிட் மெர்தாஜம், ஆறாம் வகுப்பு - 1951
ஏழாம் வகுப்பு : கெடா/பினாங்கு 1951-1953
எஸ்டிபிஎம் : ஈப்போ, 1967
தொழில்:
ஆசிரியர் பணி
- 1.4.1953 - 10.5.1956 ஆசிரியர். பத்துகவான் தோட்டம், பினாங்கு
- 19.9.1956 - 25.3.1958 சங்கமணி வார இதழ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
- 1.4.1960 - 31.12.1961 அரசினர் தமிழ்ப்பள்ளி ஈப்போ
- 1.1.1962 - 31.4.1962 அரசினர் தமிழ்ப்பள்ளி சிம்பாங் லீமா, பாரிட் புந்தார்
- 1.5.1952 - 31.1.1967 மகாத்மா காந்தி கலாசாலை, சுங்கை சிப்புட்
தலைமை ஆசிரியர் பணி
1.2.1967 - 31.12.1979 (தலைமையாசிரியர் பணி விலகல்)
சமூகப்பணி:
- தேசிய நிர்வாகச் செயலாளர், அகில மலாயா தமிழர் சங்கம்
- தமிழ் இளைஞர் மணிமன்ற தோற்றுநர்களில் ஒருவர்
- தேசிய மணிமன்ற அமைப்புத் துணைத் தலைவர்
- ஈப்போ மணிமன்றத்தின் அமைப்பு செயலாளர்
- பேரா மாநில மணிமன்ற அமைப்புத் தலைவர்.
- மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்க பேரா மாநில கிளைத் தலைவர்
- பேரா மாநில இந்தியப் பள்ளி கூட்டுறவுக் கழகச் செயலாளர்
- இளைஞர் அமைப்புகள், கூட்டுறவுக் கழகங்கள், மொழி, இலக்கிய, சமய கலை, பண்பாட்டு அமைப்புகள்
அரசியல் பணி
- மஇகா அரசியல் பணி: 1954இல் பினாங்கு, பிறை நகரில் நடைபெற்ற மஇகாவின் எட்டாவது தேசிய மாநாட்டில் தொண்டர்படை உறுப்பினர்
- 1960 மஇகா ஈப்போ கிளை உறுப்பினர்
- 1967 கிரிக் கிளை உட்கணக்காய்வாளர்
- 1971 மஇகா ஈப்போ மேற்கு கிளை செயலவை உறுப்பினர்
- 1971 மஇகா பேரா மாநில துணைச் செயலாளர்
- 1974 மஇகா பேரா மாநில இடைக்காலச் செயலாளர்
- 1974 மஇகா ஈப்போ தாமான் பெர்த்தாமா கிளைத்தலைவர்,
- 1975 - 1981 பேரா மாநில மஇகா செயலாளர்
- 1992 தாப்பா தொகுதித் தலைவர்
- 1981 - 1997 பேரா மாநில மஇகா தலைவர்
- 1974 - 1991 மஇகா மத்திய செயலவை உறுப்பினர்
- 1991-2000 மஇகா உதவித் தலைவர்
- •••• மஇகா தேசிய பேரவை சபாநாயகர்
அரசுப் பணிகள்:
- 1975 - 1979 ஈப்போ நகராண்மைக் கழகம், பேராக்
- 1979 - 1985 நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் (செனட்டர்)
- 1985 ஐக்கிய நாட்டு சபை மலேசியப் பேராளர்
- 1986 - 1990 சுங்காய் சட்டமன்றம் உறுப்பினர், பேராக்
- 1990 - 1999 பேராக், தாப்பா தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
- 1991 - 1995 நாடாளுமன்ற செயலாளர்
- 1990 - 1995 நல்வாழ்வுத் துறை துணையமைச்சர், மலேசியா
- 1995-1999 புறநகர் மேம்பாட்டுத் துறை துணையமைச்சர், மலேசியா