அவன் அன்று முதல் நாள் வகுப்பின் உள்ளே சென்றான் யாரையும் தெரிந்து இருக்க வில்லை அவனுக்கு.
அனைவரும் புதுமுகங்கள் யாருடனும் உரையாட மனமேனோ ஒவ்வவில்லை
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு தரகம்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் படித்து அதே பள்ளியில் மீண்டும் பதினொன்றாம் வகுப்பில் தான் யாரையும் அவனுக்கு தெரியவில்லை அனைவரும் வெவ்வேறு வகுப்புகளில் பத்தாம் வகுப்பில் படித்து முதல் நிலை வகுப்பில் வந்தவர்கள் . வகுப்பில் மொத்தம் ஐந்து டேபிள் ஆண்களுக்கு 4 டேபிள் பெண்களுக்கு என்று போட்டிருந்தனர்.
முன்னர் எல்லாம் 11, 12 வகுப்புகளுக்கு மட்டுமே சேர் டேபிள் போட்டு வைப்பார்கள் அவன் படிக்கும் பொழுது தான் 9, 10 வகுப்புகளுக்கு டேபிள் சேர் வந்தது. முதல் நாளில் யாருடனும் உரையாடாமலே நாள் முடிந்தது. இரண்டாம் நாள் முதல் நண்பன் அறிமுகம் ஆனான் ராக்கண்ணன் பெயருக்கு ஏற்ப நட்பிலும் கண்ணனாக கூடவே வருபவன். அப்படியாக ஒரு வாரம் கழிந்தது. அவனும் நண்பனும் நான்காம் டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர் .
அனைவரும் சேர்ந்தாயிற்று வகுப்புகள் நடக்க ஆரம்பாகியது.
அவன் கூச்ச சுபாவம் உடையவனாதலால் அதிகம் மாணவிகளுடன் பேசுவதையோ விரும்ப மாட்டார்கள் அவனும் நண்பனும் அதிகம் சினி காதல் கதைகளை வாடிக்கையானது.
ஆசிரியர் வகுப்புக்கு அதிகம் வரமாட்டார்கள் காரணம் 12 ஆம் வகுப்பிற்கு கவனம் செலுத்தியதால். அப்பொழுது தான் பார்வையால் அறிமுகம் ஆனால் அவள் அவனுக்கு நேர் பெஞ்சு ஜன்னலோரம் அவள் அமர்ந்து இருப்பாள்
அடிக்கடி பார்த்து கொள்வாள் வகுப்பு நடக்கும் பொழுதும் கூட கவனித்து உள்ளான் அவன்.
அவள் யாரை பார்த்தால் என்று தெரியாது அவனையா இல்லை அவன் நண்பனையா என்று. ஆனால் அவன் தினமும் அப்பார்வையில் எதோ ஆகி விட்டான் அப்படி ஒரு பார்வை கண்ணாலே பேசும் அவளது உருண்ட விழிகள் உள்ளத்தை எதோ தான் செய்து விட்டது போல் அவனுக்கு.
ஆனால் பேசியது இல்லை அவளிடம் இரண்டு வருடங்களும் இறுதி வரை ஒற்றை பார்வையாலே ஒருவனை பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வர வைத்தது அவளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இறுதி நாட்களில் கூட பேச முயற்சி செய்தவளாய் அவளும் பேசாமலே பிரிந்து சென்றவனாய் அவனும். காலத்தின் மாற்றம் அவளை என்றும் நினைவில் பள்ளி காலம் என்றால் அவனுக்கு அவன் நண்பனும் அவளுமே மறக்க முடியாத மலரும் நினைவுகளாய் என்றென்றும்.
#அவன்_என்றவன்_நான்