கவிதை மட்டும் பகிரி குழு பற்றி சில செய்திகள். கடந்த ஜூலை 24ம் தேதி இக்குழுவின் நிர்வாகி திரு என். ஏகம்பவாணன் அவர்கள் எண்ணத்தில் உதிதிட்ட ஒரு பணி என உருவெடுத்தது. அதில் உடனே 256 நபர்கள் இணைந்தனர்.

இக்குழுவின் சிறப்பு யாதென அறிவதாயின் இக்குழுவில் தினசரி ஒரு தலைப்பு தரப்படும். அதற்கு கவிஞர்கள் கவிதை எழுதி மாலை நேரத்தில் பதிவிட வேண்டும்.

அக்கவிதைகளில் சிறந்ததென முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சிறப்புப் பரிசு, இரண்டு ஆறுதல் பரிசென தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தினந்தோறும் தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், ஊடகவியலாளர் என யாராவது ஒருவர் தினமும் நடுவராக செயல் படுவார்கள். பரிசுக்கு தேர்வு பெறும் கவிதைகள் மற்ற கவிஞர்களின் பாராட்டைப் பெறும்.

இவ்வாறு இதுவரை 160 நாட்களை கடந்து 160 நடுவர்கள் பங்கேற்போடு சீரும் சிறப்புமாக செயல்பட்டு வரும் ஓரே ஒரு பகிரி குழு இதுவாகும், இக்குழுவில் தமிழறிந்த அறிஞர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், கடல் கடந்து பிற நாடுகள் என கலந்து கொள்வதும் இக்குழுவின் சிறப்பாகும், இதன் நிர்வாகியான திரு என். ஏகம்பவாணன் அவர்கள் கவிதை மட்டும் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றினை கடந்த நவம்பரில் உருவாக்கி வெளியிட்டு வருவதும் கூடுதல் சிறப்பு.

அதனோடு வாரந்தோறும் சலனப்பட கவிதைப் போட்டி, வேற்றுமொழி பாடல்களின் மெட்டுக்கு பாட்டு எழுதுதல் என பல்வேறு போட்டிகளும் இக்குழுவில் உண்டு.

மாலை போட்டிக் கவிதை பதிவிட்ட பின்னர் இரவு தொடங்கி மறுநாள் காலை பத்து மணி வரை ஹைக்கூ கவிதை எழுதுதல் பகல் நேரங்களில் கவிஞர்களின் விருப்பப்பட்ட தலைப்புகளில் பொதுக் கவிதை பதிவிடவும் ஊக்குவிக்கப் படுகிறது.

பொதுக் கவிதைகளில் சிறந்தவற்றை குழுவின் கவிஞர்களே வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பதும் ஏகம்பவாணன் அவர்கள் தலைமையில் ஒரு ஆசிரியர் குழு இயங்கி மேற்பார்வை செய்து வருவதும் கூடுதல் சிறப்பாகும்.

இக்குழுவில் தாங்களும் பங்கேற்க வேண்டுமென விருப்பம் உள்ளோர் இப்போதே தொலைபேசி எண்: 99400 74009 என்ற எண்ணில் நிர்வாகி ஏகம்பவாணனை தொடர்பு கொள்ளலாம்


தொகுப்பு: மா கோமகன், ஆசிரியர் குழு