சீர்வரிசை

இந்தியாவின் பாரம்பரியமான விஷயங்களில் சீர்வரிசையும் ஒன்று. பெண் பிள்ளைகளை வேறு ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்களின் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை பெண் வீட்டார் அந்த பெண்ணுக்கு கொடுத்து அனுப்புவது சீர்வரிசை என்று அழைக்கப்படுகிறது.

தோற்றம்:

பண்டைய காலங்களிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது அவளோடு சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொடுத்து அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது. பெண் வீட்டாரின்  வசதிக்கேற்ப சீர்வரிசையில் அளவு மாறுபடுகிறது.

சிறப்பம்சம்: 

தமிழகத்தில் சீர்வரிசை என்பது, மணமகன் வீட்டாரின் நிர்பந்தம் இன்றி மணமகள் வீட்டாரால் கொடுக்கப்படும் ஒன்றாகும். குறிப்பாக தமிழகத்தில் காரைக்குடி மாவட்டத்தில் சீர்வரிசை கொடுக்கும் முறை என்பது பெரும் பேசும் பொருளாக உள்ளது. இவை செட்டிநாடு சீர்வரிசை என்று சிறப்பம்சம் பெற்றது. வசதிக்கு ஏற்ப குண்டூசி முதல் கப்பல் வரை வைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

செட்டிநாடு சீர்வரிசை சிறப்பம்சங்கள்:

மாப்பிள்ளை சாமான்,

பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் பரப்பும் சாமான்,

மாமியார் சாமான்

போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளது.

சீர்வரிசை வகைகள்:

சீர்வரிசை சாமான்கள்

பலகார சீர்வரிசை,

இடைவேளை பலகார சீர்வரிசை

தாய்மாமன் மிஞ்சி சீதனப் பணம் போன்றவை..

சீர்வரிசையில் அடங்கும் பொருட்கள்:

பித்தளை அண்டா, பித்தளை மூடி, இட்லி பானை, குடம், குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, துணை விளக்கு,  பூஜை தட்டு, பொங்கல் பானை, தீர்த்தச் செம்பு, நெய்சட்டி, குத்து சட்டி, மணி, பத்தி ஸ்டாண்டு, சூடக்கரண்டி,  அஞ்சறைப்பெட்டி அரிவாள்மனை, அரிசி கரண்டி, சில்வர் அண்டா, சில்வர் பானை, சில்வர் வாளி, சில்வர் குடம், அரிசி அண்டா, சோப்பு டப்பா, பவுடர் டப்பா, சப்பாத்தி கல், பருப்பு மத்து, அப்பள இடுக்கி, டம்ளர், பால் சட்டி, புட்டு குழல், எண்ணெய் தூக்கு, ஹாட்பாக்ஸ், கட்டில், மெத்தை, தலையணை, பாய், ஃபேன், கிரைண்டர், மிக்ஸி. மேலும் வசதிக்கேற்ப தங்கம் மற்றும் வைர நகைகளும் சீர்வரிசைகளாக கொடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

http://honeylaksh.blogspot.com/2013/10/blog-post_2.html?m=1