சுய விவரம்

பள்ளி முதல் தொழில் வரை

edit
 
C.V.M.P. EZHILARASAN, B.E., B.L.,

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. என தொடர்ந்து அரசியல் பயணம் மேற்கொண்டு இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய நினைவில் வாழும் திரு. சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் பெயரனும்,

தி.மு.க. செங்கற்பட்டு மாவட்ட மாணவரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், காஞ்சி மாவட்ட துணை செயலாளர், மாவட்ட அவைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்த நினைவில் வாழும் திரு. சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் மகனுமான,

திரு. சி.வி.எம்.பி. எழிலரசன், B.E., B.L., அவர்கள், காஞ்சி நகர 7-வது வட்ட செயலாளர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர், கழக மாணவரணி துணை செயலாளராக பணியாற்றி, 2017-ஆம் ஆண்டு முதல் கழக மாணவரணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

பள்ளி பருவம்

edit

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளை காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.

கல்லூரி பருவம்

edit

B.E., (ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, மேல்மருவத்தூர்.) B.L.., (டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை.)

தொழில்

edit

காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக ஆற்றிய பணிகள்:

edit

தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் நிறைவேற்றவும், மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி, சட்டமன்றத்தின் பல்வேறு விவகாரங்களில் கலந்துக் கொண்டு, விவாதங்கள் மூலம் அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

  • காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்துதல் அடிப்படையில் மருத்துவ உயர் படிப்பிற்கான கல்வி நிறுவனமாக தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மகப்பேறு மருத்துவ படிப்பிற்கான நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது.
  • அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனையில் உலக தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு இயங்கக் கூடிய மருத்துவ வளாகம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.
  • மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI Scan) புதியதாக ஏற்படுத்தப்பட்டது.
  • மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் கண்டறிய உதவும் மேமோகிராம் கருவி (Mamogram Machine) அமைக்கப்பட்டது.
  • நீரிழிவு நோயால் பாதித்தவர்கள் பயன்படுத்துவதற்கான கூடுதலாக 4 டயாலிஸிஸ் கருவிகள் (Dialysis Machine) கொண்டு வரப்பட்டுள்ளது.
  • மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு இரண்டு அடுக்குமாடி கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்தூக்கி வசதி (Lift) ஏற்படுத்தப்பட்டது.
  • புதிதாக விபத்து சிகிச்சை பிரிவு (Trauma Care) துவக்கப்பட்டது.
  • விபத்துகளில் ஏற்படும் தலைக்காயத்திற்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு தலைக் காய சிகிச்சை பிரிவு புதியதாக துவக்கப்பட்டது.
  • மருத்துவமனை முழுவதிற்கும் எந்த சூழலிலும் தடையில்லா மின்சாரத்திற்கான பீடர் செபரேட்டர் கொண்டு வரப்பட்டது.
  • பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், 30 படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
  • காஞ்சிபுரம் புதிய இரயில்வே நிலையம் அருகில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது.
  • காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் புதியதாக அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
  • விவசாயம் சார்ந்த முக்கிய ஊராட்சிகளில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தேவையான இடத்துடன் கூடிய கட்டிட வசதி கொண்ட நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து, அரசு அதனை நிறைவேற்றித் தர முன்வராத நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கோவிந்தவாடி, முசரவாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஆரியபெரும்பாக்கம் ஊராட்சியில் புதியதாக 230/110/33/11 KV துணை மின் நிலையம் ரூ. 43.89 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டது.
  • காஞ்சிபுரம் இரயில்வே ரோட்டில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட 33/11KV கொண்ட உட்புற துணை மின் நிலையம் கொண்டு வரப்பட்டது.
  • வேகவதி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட நீதிமன்றம் எண்.2 கட்ட உரிய இடத்தினை தேர்வு செய்து நீதித்துறைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மத்திய அரசின் சுற்றுலா துறையின் பிரசாத் திட்டத்தின் (PRASAD Scheme) மூலம் பெருமளவில் சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் 25 கோடி மதிப்பில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
  • மத்திய அரசின் கீழ் இயங்கும் இரயில்வே துறையை வலியுறுத்தி காலை 06.10 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு, மாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு என புதிய இரயில் பெறப்பட்டது. மேலும், காலை 07.10 மணிக்கு சென்று கொண்டிருந்த விரைவு இரயிலை சாதாரண இரயிலாக மாற்றியதால், இரயில் பயணிகள் பெருமளவில் வருத்தம் தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினரின் நான்கு மாத தொடர் வலியுறுத்துதலின் பேரில் மீண்டும் விரைவு இரயிலாக மாற்றப்பட்டது.