எங்கே செல்கிறோம்


உயிர்த்ததிலிருந்து இறக்கும் கடைசி தருவாய்வரை வாழ்வில் என்ன செய்தோம் என்று யோசித்தே நம்மில் பலர் வாழ்வை முடித்துக் கொண்டு உள்ளனர். இவ்வாறு உயிர் கொண்ட அடுத்த தருணமே அழவில்லை என்றால் நாம் பிறந்து உயிரை மாய்த்துக் கொள்ள வந்தவர்கள் என்கின்றனர். அடுத்து அடுத்து என்று பிற்பாடு வருவதனை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் தற்போது தன்னுடன் வாழ்வது யார்?. ஒவ்வொரு நொடியும் பிறகு என்ன நேரும் என்பதனை யோசித்தே வாழும் நம்மில் பலருக்கும் தெரிந்தது அடுத்த நொடி உறுதியற்ற தன்மை கொண்ட வாழ்க்கை.‌ இத்துணை தெரிந்தும் ஏன் இந்த ஓட்டம் கொண்ட நடை?. யோசித்து நிதானமாக நம் வாழ்வை இரசித்து வாழ்ந்து கடப்போம்.

            நன்றி!