எம்ஜிஆரின் தமிழ்நதி மக்கள் சங்கம்

edit

அனைத்து வளத்துடன் அனைவரும் இன்பமுறும் ஏற்றமிகு தமிழகம் அமைந்திட ஜாதி, மதபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிட இப்போதைய சூழ்நிலையில் என்ன செய்திட வேண்டும் இது தான் மக்கள் முன் உள்ள கேள்வி.

விவசாயம், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு குடியிருப்பு வசதி, பெண்கள் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவம் மற்றும் தூய்மைப் பணிகள் இவற்றில் ஏராளமான இடர்பாடுகளை எதிர் கொண்டு தடுமாறும் தமிழகத்தைத் தலை நிமிரச் செய்திட உறுதி கொண்டுள்ளது.

புரட்சித் தலைவரின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சோதனைகளும் அதை வென்றிட அவர் காட்டிய மன உறுதியும் எடுத்த துணிச்சலான முடிவுகளும் அனைவருக்கும் வழிகாட்டியாய் அமைந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் மதிக்கப்பட்ட தேச நலனுக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து தமிழக மக்களுக்காகப் போராடிய போற்றுதலுக்குரிய தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தலையாய கடமையாகக் கொண்டு அரும் பணியாற்றியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தமிழகம் மற்றும் உலகெங்குமுள்ள இத்தலைவர்களின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்தத் தலைவர்கள் மக்களுக்காக செய்திட நினைத்த கடமைகளை நிறைவேற்ற உழைத்திட உறுதியுடன் உள்ளார்கள்.அவர்களை ஒன்றிணைத்து கடமையாற்றுவதுதமிழ்நதியின் குறிக்கோளாகும்.

தமிழ்நதி இப்போது ஊற்றாய் உருவாகி உள்ளது. இது சிற்றோடையாய் சிலிர்த்தோடி காட்டாறாய் அணை கடந்த வெள்ளமாய் பாய்ந்து தமிழ் மண்ணை வளமாக்கும் என்பது காலத்தின் கட்டளை.

தமிழ்நதி அமைப்பின் செயல் திட்டங்களால் உருவாகும் வளத்தால் விளையும் நன்மைகள் இம்மண்ணின் மக்களை புரட்சித் தலைவரையும் அவர் போற்றிப் பாராட்டிய தலைவர்களையும் நன்றியுடன் நினைவு கூறச் செய்யும்.

எம்ஜிஆர் உருவாக்கிய, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டிய பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம், குடிசைக்கு ஒரு மின்விளக்கு மற்றும் பல திட்டங்கள் போல் உருவாக்கும் ஆற்றல் மிக்க இளம் தலைமுறைத் திறனாளர்கள் எம்.ஜி.ஆர் ஆட்சி கால கல்விக் கொள்கையால் நம்மிடம் ஏராளமாய் உருவாகி உள்ளார்கள்.

அவர்களின் திறமைகளை ஒன்றிணைத்து விவசாயம், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதி, பெண்கள் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆகியவற்றில் ஒப்பற்ற திட்டங்களைப் பிரகடனப்படுத்திச் செயலாற்றுவதே பொன்மனச் செம்மலுக்கும, அவர் போற்றி வணங்கிய தலைவர்களுக்கும் நாம் செலுத்தும் காணிக்கையாகும்.

பெற்றோரும் இளைய தலைமுறையினரும் இணைந்து செயல்பட்டால் சாதிக்கலாம்.

சங்க நிர்வாகிகள்

edit

பெயர்

edit

திரு. L.V. ஆதவன்திரு. N. வீரராகவன்திருமதி. ஹேனா ஜார்ஜ் மாத்தன்திரு. S.G. நாராயணமூர்த்திதிரு. D. அரவிந்த்திரு. துரை கருணாநிதிதிரு. K.B. முத்துகிருஷ்ணன்திரு. P. தமிமுன் அன்சாரிதிரு. V. சங்கையா

பொறுப்பு

edit

தலைவர்செயலாளர்பொருளாளர்துணைத் தலைவர்துணைச் செயலாளர்நிர்வாக உறுப்பினர்நிர்வாக உறுப்பினர்நிர்வாக உறுப்பினர்நிர்வாக உறுப்பினர்