In this page I'm going to place the content on the history of Bhavsar Kshatriya Community copied from the website bhavsarinternational.org in both English (Original) and in Tamil (traslated by self).


TRANSLATED VERSION - TAMIL


முன்னுரை

edit

நம்மில் பலருக்கு நாம் பாவ்சார் மராட்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவோம். ஆனால் நம் சமூகத்தின் வரலாற்றைப்பற்றி எவருக்கும் முழுமையாக / தெளிவாக தெரிந்ததில்லை. ஒரு சிலர் தம் குடும்ப பெரியவர்களின் வாயிலாக ஓரளவிற்கு மட்டுமே வரலாற்றை தெரிந்து வைத்துள்ளனர். இருந்தாலும், தமக்கு தெரிந்த விவரங்களின் நம்பகத்தன்மை குறித்து எழும் ஐயப்பாட்டின் காரணமாக மற்றவருடன் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இன்னும் சிலரோ நம் சமூகத்தைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருந்தும் அதற்க்கான வசதி வாய்ப்புகளின்றி உள்ளனர். எனக்கும் இதைப்போன்றே நீண்ட காலமாக நம் சமூகத்தைப்பற்றி அறியும் தேடல் இருந்து வந்துள்ளது. தற்ச்செயலாக, சமீபத்தில் ஒரு வலைத்தளத்தின் மூலம் என் தேடலுக்கு விடை கிடைத்தது. இந்த விவரங்கள் நான் அறிந்துள்ள வகையில் பெரும்பாலும் ஒத்துப்போவதை என்னால் உனர முடிந்தது. வலைத்தளங்களில் கிடைத்த விவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததினால் தென்னிந்தியாவில் உள்ள நம் பலருக்கும் தெரிந்த மொழியான தமிழில் மொழி பெயர்த்து நான் அறிந்த இந்த விவரங்களை தமிழ் அறிந்த மற்ற நம் சமூகத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். (குறிப்பு: இக்கட்டுரையின் மூல வடிவான ஆங்கில பதிப்பினைக் காண கட்டுரையின் இறுதியில் பட்டியளிடப்பட்டுள்ள மேற்கோள்கள் பகுதியைக் காணவும்.)

பாவ்சாரர் தோற்றம் மற்றும் வரலாறு

edit

சாதி முறை இந்திய சமூகங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ கிமு 1500 க்கு முன்பிருந்தே மனு சாஸ்திரம், இந்திய சாதி அமைப்பு முறைகளைப்பற்றியும், அவற்றின் அமைப்பு விதிகளைப்பற்றியும் விளக்கியுள்ளது. ஆரம்பகாலங்களில், இந்து மதத்தில் பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளே இருந்தன. இந்தியா, நாளடைவில், அந்நிய படைஎடுப்புகளினாலும், குடிபெயர்ந்தவர்களாலும், அந்நிய வியாபாரிகளாலும் பல்வேறு தரப்பட்ட சமூக மாறுபாடுகளுக்கு ஆளாயிற்று. இத்தகைய ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்று நிகழ்வுகளினால், இந்திய சாதி முறைகளில் மிகப்பெரும் மாறுதல்கள் ஏற்ப்பட்டு, சாதிகள், உட்சாதிகள், உட்பிரிவுகள் உண்டாயின. இத்தகைய மாபெரும் மாறுதல்களின் விளைவாக, இந்தியாவின் எந்தவொரு சாதியின் தோற்றம் மற்றும் வரலாற்றுக்குறிப்புகள் துல்லியமாக அறுதியிட்டு கூற இயலாவண்ணம் உள்ளது. மேற்கத்திய நாடுகளில், ஒருவரின் சில நூறு ஆண்டுகள் வரையிலான குடும்ப வரலாற்றை கண்டறிதல் என்பது மிக எளிதானது. ஏனெனில் கிருத்துவ தேவாலயங்களிலும் நகர மன்றங்களிலும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களை பதிவு செய்வதென்பது பல நூறாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இது மட்டுமன்றி, மிக வலிமையான பாரம்பரியமாக, சாம்ராஜ்ஜியங்கள் மற்றும் மக்களின் வரலாறுகளை எழுதி பதிவு செய்தல் கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகங்களில் இருந்துள்ளது. இம்மாதிரியான வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கு துரதிஷ்டவசமாக இந்தியாவில் எல்லா கால கட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டதில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடுப்புகளையும் மற்ற ஆங்கிலேயர் காலத்து வரலாற்று தடயங்களையும் தவிர பெரும்பான்மையான புராதான இந்திய வரலாறு நீண்ட நாட்களாக இருளிலேயே இருந்துள்ளது. இருந்தாலும், மிக வலிமையான இந்திய பாரம்பரியமாக, மதம் சார்ந்த உரைகள் மற்றும் வேதங்கள் வாய்மொழியாகவும் எழுத்து வடிவமாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. வேத புராணங்களும், பழங்கதைகளும் சில வகைகளில் மட்டுமே நம் வரலாற்றை அறிய உதவுகின்றன. ஏனெனில் வேத புராணங்களும், பழங்கதைகளும் வெறும் கற்பனை வடிவமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அவை தகுந்த அல்லது நிச்சயமான ஆதாரமின்றியும் உருவாக்கப்பட்ட காலம் குறிப்பிடப்படாமலும் உள்ளன. எனவே நாம் வேத புராணங்களையும், பழங்கதைகளையும் வரலாற்றுக்கு இணையாக மாற்றீடு செய்ய இயலாது.

பாவ்சார் குலம் / சமூகத்தின் தோற்றம் இன்று உள்ள நிலையில், முழுவதுமாக புராணங்களாகவும் பழங்கதைகளாகவுமே அறியப்பட்டுள்ளது. அவ்வாறான பழங்கதைகளுள் ஒன்றில் கடவுள் பரசுராமர் ஒரு சமயத்தில் அனைத்து க்ஷத்ரியர்களையும் அழித்ததாகவும், அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள் ஹிங்குலாஜா தேவியிடம் அடைக்கலம் புகுந்து பாவ பக்தியுடன் இருந்து பாவ்சாரர்களாக மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு கதை இரண்டு க்ஷத்ரியர்களைப்பற்றியது: பாவ்சேன் மற்றும் சார்சேன், இவர்களிருவரும் சேர்ந்து நிறுவியதே பாவ்சார் குலம். இவ்விரு வீரர்களின் வரலாறும் எந்த ஒரு புத்தகத்திலும் காணப்படவில்லை. இவ்விரண்டும் வெறும் கதைகளே என்பதால் இவை நம் வரலாற்றையும் அதன் தோற்றம் குறித்தும் தெளிவாக விளக்க உதவவில்லை. கிடைத்துள்ள ஆதாரங்களை கவனமாக ஆய்வதே ஒரூ சமூகத்தைப்பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ளும் ஒரே வழி. எனவே ஒட்டுமொத்த மானுட சமூக அம்சங்களான தற்போதைய மக்களின் பூகோள வாழிட பரவல், கலாச்சாரம், தொழிலும் பிற பண்புகளும் அம்சங்களும், பொதுவான பழக்க வழக்க அடையாளங்கள், பேசப்படும் மொழி மற்றும் வழக்கு மொழிகள் மற்றும் சமூகத்தைப்பற்றி கிடைத்துள்ள வரலாற்று மேற்கோள்கள் ஆகியவற்றின் ஆய்வு அவசியமானது. இதன் பின், முயற்சித்து, கிடைத்த உண்மைகளை ஒன்றிற்கொன்று தொடர்புபடுத்தி சுருக்கமான வரலாற்று குறிப்பினை உருவகப்படுத்தலாம். இது ஒரு மாபெரும் சிரமங்கள் நிறைந்த ஆராய்ச்சி ஆகும். எனவே நாம் நம்மைப்பற்றி ஓரளவு அறிந்துகொள்ள,இன்று நமக்கு தெரிந்துள்ள நம்மைப்பற்றிய முக்கிய உண்மைகளை சேகரித்து ஒன்றினைப்பதே விரைவான வழியாகும்.

குல தெய்வம்

edit

  பாவ்சார்களின் மூல குல தெய்வமாக ஹிங்குலாஜா மாதா அல்லது ஹிங்குலாம்பிகா என கோரப்படுகிறது. ஹிங்குலாம்பிகாவின் பழமை வாய்ந்த கோயில் தற்போதைய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அமைவிடம், ஆரம்ப காலங்களில் பாவ்சார்கள் சிந்து மாகாண பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்புணர்த்துகிறது. இந்த ஹிங்லாஜ் கோயில் அப்பகுதிவாழ் இந்துக்களின் முக்கியமானவொரு புனிதத்தலமாக விளங்குவதையும், அவர்களுள் ஒரு சிறிய இந்து சமூகத்தினரால் இக்கோயில் பேனப்படுவதையும் கவனிக்கப்படவேண்டும். பாவ்சார்கள் இச்சிறிய சமூகதைச்சேர்ந்த, அதே கடவுளை வழிபடும் ஓர் பிரிவினராக இருந்திருக்கலாம். இதைத்தவிர வேறு எந்தவொரு தெய்வங்களோ, கோயில்களோ இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதியிலோ பாவ்சார்களால் பொதுவாக வழிபாடு செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே, இதுவே பாவ்சார்கள் சமூகம், ஒன்றுபட்ட இந்தியாவின் மேற்கு பகுதிகளில் தோன்றியதாக நம்ப போதுமான ஆதாரமாகிறது.

மக்கள் வாழ்விட பரவல்

edit

ஒன்றுப்பட்ட இந்தியாவின் மேற்குப்பகுதியை தொடக்க வாழிடமாக கொண்டிருந்த பாவ்சார்கள் பின்னாளில் குஜராத் மாநிலம் முழுவதும் பரவி குடியேறத்தொடங்கினர். குஜராத்திலுள்ள பெரும்பாலான பாவ்சார்கள் தங்களின் குடும்பபெயராக "பாவ்சார்" என கொண்டு சுலபமாக அடையாளம் காணப்படுகிறார்கள். இச்சமூகத்தின் குடியேற்றம் மேலும் பல நூறு ஆண்டுகளாக தெற்கு நோக்கி தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளில், குறிப்பாக மஹாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தனர். இத்தகைய இடம் பெயர்வு பொருளாதார காரணங்களுக்காக இருந்திருக்கலாம். குஜராத்திற்கு வெளியே மகாராஷ்டிர மாநிலமே பாவ்சார்களின் நீண்ட கால வாழிடமாக தோன்றுகிறது. மகாரஷ்டிரத்திலும் தொடர்ந்து தெற்கிலும் குடியேறிய பாவ்சார்கள் மராத்தி மொழியையே மகாராஷ்டிரத்திலுமட்டுமின்றி தொடர்ந்து தென்னிந்தியாவிலும் பேசிவந்துள்ளனர். பாவ்சார்களின் வழக்கு மொழி இடத்திற்கு இடம் மாறினாலும் அவர்களின் மொழி மராத்தியை ஒத்தே இருந்துள்ளது. அவர்களின் குடும்ப பெயர்களும், மராத்திய மரபின் படி அம்பர்கர், ஜவல்கர், கோகலே, பிசே, பல்லே, பதங்கே என்பன போன்றே இருந்துள்ளது. பொதுவாக காணப்படும் குடும்பப்பெயர்களுள் ஒன்றான "குஜராத்தை சேர்ந்தவர்" என பொருள்படும "குஜ்ஜர்" என்ற குடும்பப்பெயர், பாவ்சார்களுக்கு குஜராத்தி பாவ்சார்களிடம் உள்ள தொடர்பையும் மூலத்தையும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

பொது தொழில்

edit

முற்காலங்களில் ஒவ்வொரு சாதியினரும் ஒரு குறிப்பிட்ட வாணிகம் அல்லது தொழிலைக் கொண்டிருந்தனர். பாவ்சார் சமூகத்தினரும் துணிகளுக்கு வண்ணம் தோயத்தலை தொழிலாகக்கொண்டிருந்தன்ர். அவர்கள் "ரங்க்ரேஜ்" என குஜராத்திலும் "ரங்காரி" என மற்ற இடங்களிலும் அழைக்கப்பட்டனர். ("ரங்" என்றால் வண்ணம் / நிறம் என வட இந்திய மொழிகளில் பொருள்படும்). இத்தொழிலே நீண்ட காலமாக பாவ்சார்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இயந்திரமயமாக்கப்பட்ட ஜவுளித் தொழிற்ச்சாலைகள் அறிமுகப்படுத்திய பின்னர், கைத்தொழில்கலாக இருந்த நெய்தல் மற்றும் வண்ணம் தோய்க்கும் தொழில்கள் படிப்படியாக அழிவிற்க்குண்டானது. இந்த இயந்திரமயமாக்களுக்கு இறையானோர்களில் ஒருவரான ரங்காரிகள் மாற்றுத்தொழிலைத் தேட ஆளாயினர். சில ரங்காரிகள் (பாவ்சார்கள்) தங்களுக்கு இயல்பான தொழிலான தையல் தொழிலை மாற்றுத்தொழிலாக ஏற்றதே தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாவ்சார்கள் தையல்காரர்களாக இருப்பதற்கான காரணமாகும். இன்று கூட, சில பெரியோர்கள் தம் இளவயதில் வண்ணம் தோய்த்தலை தொழிலாக கொண்டிருந்தவர்களாக உள்ளனர். தென்னிந்தியாவில் தையல் தொழில் தொடர்ந்து பாவ்சார்களின் மிகப் பொதுவானத் தொழிலாகக் காணப்படுகிறது. இருப்பினும், குஜராத்திலுள்ள பாவ்சார்கள் மற்ற தொழில் நிபுணர்களாகவும், வணிகர்களாகவும், சிறு அளவிலான வர்த்தக நிறுவன உரிமையாளர்களாகவும் பல்வேறு தரப்பட்ட தொழில்களில் சிறந்து காணப்படுகின்றனர்.

பண்பாடு மற்றும் பாரம்பரியம்

edit

குஜராத்திலுள்ள பாவ்சார்கள் குஜராத் முழுவதிலும் பரவி கிட்டத்தட்ட குஜராத்தின் அணைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சைவ உணவை மட்டுமே உன்னுபவர்களாகவும் குஜராத்தி மொழி பேசுபவர்களாகவும், அவர்களின் பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களும் குஜராத்திய முறையை ஒத்தும் காணப்படுகிறது. அகமதாபாதை சேர்ந்த கல்வியாளர் முனைவர் மிலாப் பாவ்சார் தம் முனைவர் பட்டத்தை பாவ்சார்கள் சமூகத்தைப்பற்றிய ஆய்வின் மூலம் பெற்றுள்ளார். இவரின் ஆய்வு குறிப்பாக குஜராத்திலுள்ள குஜராத்திய பாவ்சார் சமூகத்தின் பரவல், அவர்களின் பாரம்பரியம், மற்றும் சமூக அமைப்புகளைப் பற்றி மட்டுமே விவரிக்கின்றது. மேலும் அவருடைய பாவ்சார்களின் தோற்றம் குறித்த ஆய்வு புராணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள பாவ்சார்கள் சற்று வித்தியாசமான மராத்தி மொழி பேசுபவர்களாகவும், பொதுவாக அசைவ உணவு உன்னுபவர்களாகவும், பல மராத்திய மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். பண்டரிபுரத்திற்கு வார்க்கரியாக (மராத்தி மொழியில் பண்டரிபுரதிரற்கு புனித யாத்திரை செல்வோரை வார்க்கரி என்பர்) செல்வதும் அவ்வாறான மத / கலாச்சார மரபுகளுள் ஒன்றாகும். தென்னிந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் உள்ள பாவ்சார் க்ஷத்ரியர்கள் பெருமளவில் பண்டரிபுர வார்க்கரி என அழைக்கப்படும் விட்டோபாவின் பக்தர்களாகவும் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் ஆஷாட ஏகாதசியில் பண்டரிபுரத்திற்கு புனித யாத்திரை மேற்க்கொள்பவர்களாகவும் உள்ளனர். சமய துறவிகளான துக்காராம், நாம்தேவ், ஞானதேவ் போன்றோரின் பஜனைகளும் அபங்களும் (கீர்த்தனைகள்) தொடர்ந்து தவறாமல் பாவ்சார் சமூக கோயில்களில் நடைபெற்றும் வந்துள்ளது.

க்ஷத்திரியர் பாரம்பரியம்

edit

பொதுவாக பாவ்சார்கள் தாங்கள் வீரர் குலமான க்ஷத்திரியர்கள் என கருதுகின்றனர். ராஜபுத்திரர்கள் போன்றோ அல்லது மராட்டாக்களைப் போன்றோ, பாவ்சார் க்ஷத்ரியர்கள் எந்த ஒரு நிலப்பகுதியையும் ஆட்சி செய்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. அது மட்டுமில்லாமல், எந்தவொரு இராஜ்ஜியத்தின் படைகளில் பாவ்சார்களின் பங்களிப்பைப்பற்றியோ, எந்தவொரு போரிலும் ஈடுபட்டதாகவோ வரலாற்று தகவல்கள் இல்லை. 400 ஆண்டுகளுக்கு முந்தைய மராட்டிய பேரரசுகளிலும் பாவ்சார் குலத்தினரின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு ஏதும் இருந்ததாகவும் அறியப்படவில்லை. ஆகையால் பாவ்சார் சமூகத்தினர் க்ஷத்திரியர்களாக அறியப்படும் காரணத்தை விளக்குவது கடினமாகிறது. அநேகமாக க்ஷத்திரியர் பெயர்க்காரணம் புராணங்களிலிருந்து வெளிவராமல் புதைந்து வரலாற்று அடிப்படையின்றி போயிருக்கலாம். அண்மைக்கால வரலாற்றில், பாவ்சார்களின் இராணுவத்துடனான தொடர்பு, அவர்களின் தற்போதைய குடியேற்றப்பகுதிகளான அப்போதைய ஆங்கிலேய படைத்தலங்கலாக விளங்கிய பூனா, பெங்களூர், மைசூர், பெல்காம், பெல்லாரி, சென்னை போன்ற இடங்களில் தங்கி ஆங்கிலேயப் படையினருக்காக தையல் தொழிலில் ஈடுபட்டதின் வாயிலாகக் காணப்படுகிறது. இதைப்போலவே, அநேகமாக பார்சார் சமூகம் மற்ற பல ஆட்சியாளர்களின் படையினருக்கும் வண்ணம் தோயப்பவராகவும், தையலராகவும் பணியாற்றியிருக்கலாம். இவ்வாரான பல்வேறு ஆட்சியாளர்களின் படைகளிடம் பாவ்சார்ககளுக்கு இருந்த தொடர்பின் மூலமாக பாவ்சார்கள் க்ஷத்திரியர்கள் என்ற அடையாளத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பாவ்சார்களின் க்ஷத்திரியர் பெயர்க்காரணத்தை தெளிவாக அறிய மேலும் ஆய்வுகளின் தேவை நிச்சயமாகும்.

“பட்” பாரம்பரியம்

edit

“பட்” எனப்படுவது இந்தியாவில் காணப்படும் பல குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும். “பட்” குடும்பத்தினரின் மூலமாக பாவ்சார் சமூகத்தினர் தம் சந்ததியினரைப்பற்றிய விவரங்களை விரிவாகப் பதிவு செய்யும் வழக்கம் மிகவும் குறிப்பிடத்தகுந்த பாரம்பரியங்களுள் ஒன்றாகும். “பட்” குடும்பத்தினர் தம் ஒவ்வொரு பாவ்சார் குடும்பத்தின் வரலாற்றைப் பல தலைமுறைகளாக பதிவு செய்து வந்துள்ளனர். இதன் மூலம் எவரொருவரும் பாவ்சார் ஒருவருடைய வம்சாவளியைப்பற்றி தெரிந்துகொள்ளலாம். தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து வந்த 'பட்'களின் இந்த மரபு வழித் தொழில் துரதிஷ்ட்டவசமாக இன்றைய தலைமுறையினரால் கைவிடப்படுவதினால் மெல்ல அழிந்து வருகிறது. இதில் மேலும் துயரத்திற்குரிய செய்தி என்னவென்றால், 'பட்' களிடம் இன்றும் உள்ள பாவ்சார் சமூகத்தினரைப் பற்றிய எழுத்து வடிவிலான விலை மதிப்பற்ற தகவல்களும் அழிந்து வருவதேயாகும். இப்பொக்கிஷங்களை வருங்கால சந்ததியினரின் பயனுக்காக தொடர்ந்து, நவீன முறையிலேனும், பேணிப்பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கையில் தான் உள்ளது. இவ்வாறான சந்ததியினரின் முழுமையான விவரங்களையும் வரலாற்றையும் பதிவு செய்யும் முறை மிகச் சில சமூகத்தினரிடையே மட்டும் காணப்படும் வழக்கம் என்பதனை அறியவேண்டும்.

முடிவுரை

edit

இந்த பதிவு நம் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு நம் வரலாற்றை அறிந்து கொள்ள ஓரளவிற்கு உதவியிருக்கும் என நம்புகிறேன். இக்கட்டுரை, நம் சமூகத்தைப்பற்றிய மேலும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும், வலுவான மற்றும் நம் உண்மையான வரலாற்றை கண்டறிய தேவையான ஆய்வுகளுக்கும் வழி வகுக்கும் நோக்குடன், நாம் தற்சமயம் அறிந்துள்ள உண்மைகளையும் ஆதாரங்களையும் ஒன்று திரட்டி வழங்கப்பட்டுள்ளது (குறிப்பு: இக்கட்டுரை முழுவதும் கீழே மேற்கோள்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வலைதளங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்களில் எவருக்கேனும் கருத்து வேறுபாடு இருந்தாலோ அல்லது கூடுதல் விவரங்கள் தெரிந்து இருந்தாலோ எனக்கு தெரியப்படுத்தினால், அதன்படி கட்டுரையை திருத்தி அமைத்து இவ்விவரங்களை மேலும் செம்மைப்படுத்தி வெளியிடக் கடமைப்பட்டுள்ளேன்.)

மேற்கோள்கள்

edit

1. Bhavsar's history on Bhavsar international’s website: http://bhavsarinternational.org/pages/bhavsars-his.htm 2. Article on Bhavsar's History on Wikipedia: http://en.wikipedia.org/wiki/Bhavsar 3. Pictures of Hinglaj temple and idols on Wikipedia: http://en.wikipedia.org/wiki/Hinglaj_mata

Resourses Used

edit

1. Google - Tamil Transliteration 2. Online Tamil English Dictionary: http://www.tamildict.com 3. Wikipedia.



ORIGINAL POST


History of Bhavsar community

The caste system in Indian society has been in existence for thousands of years. The Laws of Manu going back 1500BC describe the caste system, its hierarchy and laws governing social interaction. Originally only four major castes have been described among the Hindus: the Brahmins, Kshatriyas, Vaishyas and Sudras. Since ancient history, India has assimilated foreign conquerors, migrants, traders and others. The dynamics of history has impacted the social system in significant ways. Over a period of thousands of years, the caste system has mutated and evolved into thousands of castes and sub-castes. It is therefore impossible to track the evolution of any single caste of today to its origins. In the western world, it is not very difficult to track one’s family history to several hundreds of years. Births, deaths and marriages have been recorded in churches and town halls for hundreds of years in Europe. There is also a very strong tradition of recording and writing history of empires and peoples from early Greek and Roman civilizations. Unfortunately in India, this kind of tradition has not always existed. Much of ancient Indian history remained in the dark for a long time and began to be reconstructed from archeological and other evidences during the British period. However, there has always been a very strong Indian tradition of preserving religious texts and scriptures in the oral and written form. The scriptures, stories, legends and mythology have been a source of information about our past in some ways. Unfortunately, stories and legends are embellished with products of imaginations and are not based on verifiable facts nor placed in historical time frame. Therefore we cannot substitute them for History.

The origin of Bhavsar caste/community as is understood today, is linked almost entirely to mythology and legends. One such legend says that Lord Parashurama annihilated all Kshatriyas and some took refuge under Hinglaja devi and became Bhavsar due to their Bhava Bhakti toward the deity. Another story is about two Kshatriyas: Bhavsen and Sarsen who founded the Bhavsar clan. There is no mention of these warriors in the history books. These are just stories which do not help much in really understanding our history and origin. The only scientific way to understand the history of a community, is by a careful analysis of available evidence. It is essential to study the overall socio-anthropological aspects of the community which includes current geographical distribution, cultural, traditional, occupational and other characteristics and features, identification of commonality of customs, language and dialects spoken and finally available historical references to the community. We can then attempt to link facts, draw inferences and sketch an outline of its history. That is an enormous task requiring painstaking research . What we can do quickly is to gather some prominent facts that we know today about our community and attempt to weave them into credible account of ourselves.

Common Deity: Hinglaj Mata or Hingulambika is claimed by all Bhavsars as their original deity. The oldest temple dedicated to this deity is in the Sindh province currently situated in Pakistan. This gives a clue that the Bhavsars may have lived in that region in the past. It should also be noted that the Hinglaj temple is an important place of pilgrimage to other Hindus of that area and is maintained by a small Hindu community that remains there. Bhavsars maybe one of the communities that resided in that area and worshipped the same goddess. There is no other older temple or deity in any other part of India that is commonly worshipped by the Bhavsars. It is therefore reasonable to assume that the Bhavsar community had its origin in the western part of undivided India.

Geographical Distribution: The Bhavsar community which originally belonged to the western part of undivided India spread over all parts of Gujarat and are found evenly distributed in Gujarat today. Most Bhavsars of Gujarat have their last name Bhavsar and are therefore easily identifiable all over the state. Migration of the community continued over several hundred years southwards and the community spread to other parts of India notably Maharashtra, Madhya Pradesh, Karnataka, Andhra Pradesh and Tamilnadu. The migration may have been caused mainly for economic reasons. Maharashtra appears to have been their first home outside Gujarat for a long time. The Bhavsars who settled in Maharashtra and further south invariably speak Marathi irrespective of their location in any southern state of India. The dialect varies from place to place but it is always some form of Marathi. Even their surnames are in the Maharastrian tradition such as Ambekar, Mirajkar, Jawalkar, Khokle, Pisay, Patange, etc. One common surname ‘Gujjar’ found in the community means ‘Native of Gujarat’ which clearly indicates the link and origin to the Gujarati Bhavsars.

Common Occupation: In the past, every caste practiced a specific trade or occupation. The Bhavsar community was engaged in the occupation of dyeing of textiles. They were also called Rangrej in Gujarat and Rangari elsewhere. (Rang means color in Indian languages). This trade remained the main occupation of the community for a long time. During the 19th century AD, mechanized textile industry was introduced in India by the British, causing gradual extinction of manual trades such as weaving and dyeing of textiles. The Rangaris were one of the victims of industrialization and were forced to find other means of work. Some Rangaris (Bhavsars) found Tailoring as a natural alternative profession and that is how a significant number of Bhavsars became Tailors in Southern India. Even today, there are some elderly people whose profession was textile dyeing in their younger days. And tailoring continues to be the most common profession of Bhavsars in southern India. The Bhavsar community in Gujarat however diversified themselves occupationally and took to a variety of jobs as artisans, traders, small business owners, etc.

Culture and Traditions: The Bhavsars of Gujarat are spread all over Gujarat in almost every district. They are mostly vegetarian, speak Gujarati and their culture and traditional rituals are very much Gujarati in style and content. A scholar in Ahmedabad, Dr Milap Bhavsar has earned his Ph.D. doing research on the Bhavsar community. This study however, is confined to the Bhavsar community in Gujarat and provides details of the distribution of the community, its traditions and social organizations in the Gujarat state of India. This study relies on Mythology to explain the origins of the community. The Bhavsars of South India are generally non-vegetarians, speak different types of Marathi and follow many Maharashtrian traditions. One such religious/cultural tradition is the Varakari tradition of Pandharpur. The Bhavsar Kshatriya community in South India, particularly in Maharashtra and Karnataka has a large number of Varakaris who are devotees of the deity Vithoba and participate in the annual pilgrimage to Pandharpur for the Kartika and Ashadha Ekadashis. Regular Bhajans and Abhangs of Saints such as Tukaram, Namdev, Gnyandeva and others are held at community temples on regular basis.

Kshatriya tradition: Bhavsars in general consider themselves Kshatriyas, the warrior caste. Unlike the Rajputs or Marathas, there is no historical evidence of any Bhavsar Kshatriya clan having ruled over any territory. Nor is there any recognition in history about the community’s contribution to an army of a kingdom or fighting any battles. The Bhavsars as a community do not seem to have played any significant role even in the history of the Maratha empire about 400 years ago. It is therefore very difficult to explain how the Bhavsar community came to be known as Kshatriyas. Probably the Kshatriya origins are buried in mythology and have no historical basis. In recent history, the closest relation of Bhavsar Kshatriyas to the military is found in the community’s association with the British army as evidenced by their settlement predominantly in the British Cantonments in Pune, Bangalore, Mysore, Belgaum, Bellary, Chennai, etc engaged in the profession of tailoring. Probably the community served the armies of other rulers too as dyers and tailors. The Kshatriya identity seems to have been acquired due to the association with the armies of the different rulers. There is certainly a need for more research to uncover the Kshatriya heritage.

The Bhat Tradition: One of the most remarkable traditions found in the Bhavsar community is the detail record keeping of family histories of the community by the Bhats. These are families known as Bhats who have recorded individual family histories of the Bhavsar community over several generations and one can trace back one’s lineage over hundreds of years. Unfortunately this tradition which was passed on from one generation of Bhats to the next is slowly dying in the modern age as the descendents of the Bhats are themselves abandoning their hereditory occupations. The tragedy is that we are losing extremely valuable information on the Bhavsar community which is available in written form even today with the descendents of the Bhat families. It is up to the present generation to preserve and protect this treasure and hopefully modernize and continue the tradition for the benefit of future generations. It is to be noted that there are very few communities in India who can claim to have such an exhaustive recorded genealogy and history.

Conclusion: An attempt has been made above to assemble general facts and indicators about our community with the intention of starting a serious dialogue and research to investigate and construct a true history of the community. We invite everyone to present to us records, fact and evidences that they may possess so that students of history can start working on this grand project. Any takers for a Ph.D, ? You will be doing service to yourself and the community.