https://podhigaitharcharbukudil.blogspot.com/
நம்முன்னோர்கள் உடலின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர் எனவேதான் தற்சார்பு பொருளாதாரத்தையும், இயற்கை மருத்துவத்தையும் முறையாக பின்பற்றினார்கள்.
ஆனால் இன்றோ உணவு பொருட்கள் முதல் உடலிற்கு வெளியே பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் நஞ்சு தான் கலந்துள்ளது.
இந்த நிலையை மாற்ற, உடலின் மீது அக்கறை கொண்ட அனைவரும் அவரவர்களுக்கு தேவையான பொருட்களை அவரவர்கள் தயாரித்தலே சிறந்தது, ஏனென்றால் நமது உடலின் மீது நம்மை விட அக்கறை கொள்பவர் வேறு யாராகவும் இருக்க முடியாது. ஒருவேளை உங்களால் தற்சார்பு பொருட்களை தயாரிக்க முடியவில்லை இயற்கை அங்காடிகளில் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் அனுமானம் உங்களுக்கு தெரியவேண்டும்.
உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்களே தயாரித்து பயன்படுத்தும் போது உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பெறுவதை உங்களால் கண்கூடாக காண முடியும். அதுமட்டுமின்றி செலவு குறைவு மற்றும் மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பதன் மூலம் பொருதார முன்னேற்றத்தையும் உங்கள் அடைய முடியும், மேலும் இயற்கையான, சுகாதாரமான, பாதுகாப்பான பொருட்களை தன் சுற்றத்தாரையும் பயன்படுத்த வைப்பதில் உள்ள ஆனந்தம் எல்லையற்றது.
எங்கோ இருக்கும் பெரு வணிக நிறுவனத்தின் முதலாளிகளை வாழ வைப்பதை விட நமது கூடவே வாழ்ந்து கொண்டிருக்கும் உற்றார் உறவினர்களையும், சுற்றத்தார் மற்றும் நண்பர்களையும் வாழவைத்து புண்ணியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற இறைவன் நமக்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு என்பதை மனதார உணரும் தருணம் இது.