தமிழ் நீதி நூல்கள் காட்டும் வழி
மனிதனது ஆளுமைப் பண்பை மேம்படுத்துவதற்குத் தமிழ் நீதி நூல்கள் தக்க வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. நீதி நன்னெறிஆகியவைகளை அவை வலியுறுத்திக் கூறும்போது ஆளுமை மேம்பாட்டிற்கான வழிமுறைகள் பலவற்றில் அடங்கியுள்ளது காணலாம்.
ஆசாரக்கோவை, நாலடியார் ,திருக்குறள் ,ஆத்திச்சூடி ஆகிய நூல்கள் தேவையான நெறிமுறைகளை நன்கு எடுத்துரைக்கின்றன .
ஆசாரக்கோவை கூறும் ஆசார வித்து எனும் முதல் செய்யுளை பார்ப்போம் ,
" நன்றியறிதல் ,பொறையுடைமை இன் சொல்லொடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியொடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து "