This is not a Wikipedia article: It is an individual user's work-in-progress page, and may be incomplete and/or unreliable. For guidance on developing this draft, see Wikipedia:So you made a userspace draft. Find sources: Google (books · news · scholar · free images · WP refs) · FENS · JSTOR · TWL |
பனைக்குளம் அல்லது Panaikulam கிராமம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் அதிகமாக தமிழக இஸ்லாமியர்கள் வசிகின்றார்கள். பனைக்குளம் ஊராட்சிமன்றமாது மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கீழே செயல்படுகிறது[1].
வரலாறு
editபனைக்குளத்தின் வரலாறு கடந்த 200 ஆண்டுகளாக மட்டுமே அறியப்படுகிறது. அதற்கு முன்பாக பதியப்பட்ட வரலாறுக்கு சான்றுகளில்லை. வயதானவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாய்வழி தகவல்களிலிருந்தும், முதல் குடியேறியவர்களின் குடும்பத்திலிருந்த ஒரு சந்ததியினரால் எழுதப்பட்ட உயில் ஆவணத்தின் உதவியிலிருந்தும், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ராமநாதபுரத்தின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தனர் என்பது அறியப்படுகிறது. அந்த மக்கள் அங்கிருந்து குளம் மற்றும் நிறைய பனை மரங்களைக் கொண்ட ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்து, அதற்கு அவர்கள் பனை (பனை மரம் என்று பொருள்) குளம் (குளம் என்று பொருள்) என்று பெயரிட்டனர். இந்த குளம் (இப்போது புகலூரணி என்று அழைக்கப்படுகிறது) மக்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் நீர் ஆதாரமாக இருந்தது.தொடர்ந்து அருகிலுள்ள கிராமத்தினரும் அங்கு குடியேறினர். குடியேறிய மக்கள் அனைவரும் மெதுவாக கிராமத்தின் உள் பகுதிகளை நோக்கி நகர்ந்தும், பிரார்த்தனை செய்வதற்காக ஒரு பள்ளிவாசலையும் (இப்போது ஜும்மா பள்ளிவாசல்) நிறுவினர்.[2]
குடியேறியவர்களில் சிலர் துணிகளை கைத்தறி நெசவு செய்து, அதிலிருந்து வியாபாரத்தை மேற்கொண்டனர். சிறிது காலத்திற்க்கு பிறகு, ஜும்மா பள்ளிவாசல் இயற்கை கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இது மிகவும் அரிதான, அழகான கட்டடக்கலையாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது, மலாயாவின் (இப்போது மலேசியா என்று அழைக்கப்படுகிறது) வேலை வாய்ப்புகள் பனைக்குளம் மக்களை ஈர்த்தன, அவர்களில் பலர் பணம் சம்பாதிக்க மலாயா சென்றனர். அவர்கள் பெரும்பாலும் பினாங்கு நகரில் பண பரிமாற்றம் மற்றும் உணவகங்கள் போன்ற தொழில்களில் ஈடுபட்டு, அங்கே குடியேறினர்.[3]
மொழி
editபனைக்குளம் மக்கள் பேசும் முதன்மை மொழி தமிழ். தமிழ் உச்சரிப்பு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பேசப்படும் தமிழைப் போன்றது என்றாலும், அரபு, மலாய் மற்றும் உருது மொழிகளில் இருந்து சில தனித்துவமான சொற்கள் அங்கு நடைமுறையில் காணப்படுகிறது. நடயம் (காலனி) மற்றும் ஆனம் (குழம்பு) போன்ற சில சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.[4]
உணவு
editபனைக்குளம் மக்கள் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கவழக்கங்கள் தமிழ் இஸ்லாமியர்கள் உணவு வகை, இலங்கை தமிழ் இஸ்லாமியர்கள் உணவு வகை மற்றும் மலாய் உணவு வகைகளுடன் ஒற்றுமை உள்ளது. உதாரணமாக, வட்டலப்பம், இடியாப்பம் போன்ற உணவுகளை இலங்கை தமிழ் இஸ்லாமியர்களும் மற்றும் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடியேறிய தமிழ் இஸ்லாமியர்களும் சாப்பிடுகிறார்கள்.[5]
போக்குவரத்து
editபேருந்து வழித்தடம்
- 6 - இராமநாதபுரம் - பனைக்குளம் - அழகன்குளம்
- 6A - இராமநாதபுரம் - பனைக்குளம் - அழகன்குளம்
- சுல்த்தான் - இராமநாதபுரம் -பனைக்குளம் - அழகன்குளம்
- 19 - இராமநாதபுரம் - பனைக்குளம் - ஆற்றாங்கரை
- 19A - இராமநாதபுரம் - பனைக்குளம் - ஆற்றாங்கரை
- தஸ்லிம் ராணி - இராமநாதபுரம் - பனைக்குளம் - ஆற்றாங்கரை
- M1 - பனைக்குளம் - அழகன்குளம் - பாரதிநகர் - இராமநாதபுரம் - சித்தார்கோட்டை - பனைக்குளம்
- அனீஸ் பாத்திமா - பனைக்குளம் - அழகன்குளம் - பாரதிநகர் - இராமநாதபுரம் - சித்தார்கோட்டை - பனைக்குளம்
கிராம ஊராட்சி நிர்வாகிகள்
editதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தபட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் - மண்டபம் ஊராட்சி ஒன்றியம் - பனைக்குளம் ஊராட்சி
2011 ஆண்டின் தேர்தல் முடிவுகள்
editகிராம ஊராட்சி தலைவர் : திரு அ ஜெய்னுல் அஸ்லாம்.[6]
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பட்டியல்[7]
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கபட்ட வேட்பாளர் பெயர் |
---|---|
வார்டு 1 | திரு எம் சகிக்குமார் |
வார்டு 2 | திரு எம் பாலமுருகன் |
வார்டு 3 | திருமதி என் பாத்துமுத்து |
வார்டு 4 | திரு எஸ் முகம்மது நிஜாமுதீன் |
வார்டு 5 | திரு எம் மஹமுது சிக்கந்தர் |
வார்டு 6 | திரு ஏ ஹனீப் கான் |
வார்டு 7 | திரு சீனிமுகம்மது லாபிர் ஹசன் |
வார்டு 8 | திருமதி எஸ் நவீர் பாத்திமா |
வார்டு 9 | திருமதி எம் ஆயிசா பீவி |
வார்டு 10 | திருமதி எஸ் சிரின் பானு |
வார்டு 11 | திரு மாரி பிச்சை |
வார்டு 12 | திரு இ எஸ் பகதூர் கான் |
2019 ஆண்டின் தேர்தல் முடிவுகள்
editகிராம ஊராட்சி தலைவர் : திருமதி B பௌசியா பானு.[8]
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பட்டியல்[9]
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கபட்ட வேட்பாளர் பெயர் |
---|---|
வார்டு 1 | திரு கு பழனிக்குமார் |
வார்டு 2 | திருமதி மு உமா |
வார்டு 3 | திருமதி இ உம்முல் தௌசினா |
வார்டு 4 | திரு சா செய்யது அன்வர்தீன் |
வார்டு 5 | திரு அ நூருல்மனான் |
வார்டு 6 | திரு சீ சீனி அன்வர் அலி |
வார்டு 7 | திருமதி சே ராலியத்துல் மர்லியா |
வார்டு 8 | திருமதி அ நஸீரா பானு |
வார்டு 9 | திரு லி மஹாதீர் மரைக்கான் |
வார்டு 10 | திருமதி செ சித்தி நிஷா |
வார்டு 11 | திருமதி அ ஸீரத்து நிஷா |
வார்டு 12 | திரு சீ முருகன் |
பிரபலமான நபர்கள்
editK.A.N பகுர்தீன் - முதல் பள்ளி வளாகத்தை நிருவினார். இப்போது இது பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.
ஹாஜி மஸ்தான் - ஹாஜி மஸ்தான் பிறந்த இடம் பனைக்குளம். இவர் இங்கு march 1 1962 இல் பிறந்தார்.[10]
- ^ "மண்டபம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் இராமநாதபுரம் மாவட்டம்" (PDF).
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ^ "Panaikulam", Wikipedia, 2019-03-27, retrieved 2020-01-07
- ^ "Panaikulam", Wikipedia, 2019-03-27, retrieved 2020-01-07
- ^ "Panaikulam", Wikipedia, 2019-03-27, retrieved 2020-01-07
- ^ "Panaikulam", Wikipedia, 2019-03-27, retrieved 2020-01-07
- ^ "Tamilnadu State Election Commission" (PDF). tnsec.tn.nic.in. Retrieved 2020-01-07.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ^ "சீற்றூராட்சி வார்டு உறுப்பினர் - 2011" (PDF).
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ^ "கிராம ஊராட்சி தலைவர் - ராமநாதபுரம் -> மண்டபம்".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ^ "Tamilnadu State Election Commission". tnsec.tn.nic.in. Retrieved 2020-01-07.
- ^ Mani, C. D. S.; Nov 2, Abdullah Nurullah | TNN | Updated:; 2015; Ist, 6:35. "When Tamil dons ruled Bombay | India News - Times of India". The Times of India. Retrieved 2020-01-07.
{{cite web}}
:|last3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)