என்னைப் பற்றி நானே சொல்வதில் என்றும் எனக்கு புதுவித இன்பமாக இருக்கிறது, நானும் நாளும் உங்களைப் போல நடுத்தர மக்களின் சராசரி வாழ்க்கையின் கஷ்டத்தை அன்போடு கடந்து சென்று கொண்டுள்ளேன், குழந்தைப் பருவத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் துவங்கியது முதல் நானும் ஓர் தமிழ் அரசின் சொந்த பிள்ளை தான், அங்கு என்னவெல்லாம் இருக்கும் என்பது அந்த சொர்க்க வாசலில் வாழ்ந்த அனைவருக்குமே தெரியும், அன்பின் ஆரம்பம் நட்பின் நம்பிக்கை மற்றும் நல்லவற்றின் பண்புகள் என் பல கற்றுக் கொண்டிருந்தாலும் கூட சத்துணவு ஆயா மாலை அடிக்கும் அந்த மணியின் ஓசை கேட்கும் முன்பே யார் முதலில் வெளியே ஓடுவது என்பதில் தான் சந்தோஷம்.... மீண்டும் துவங்கும் மணியின் ஓசை