''''ஸ்ரீ ஆபதுத்தாரண "ஆஞ்சநேயர் கோயில்'
'ரயிலடி மயிலாடுதுறை'
ஸ்ரீ ஆபதுத்தாரண ஆஞ்சநேய ஸ்வாமி
திருக்கோயில்
ரயிலடி, மயிலாடுதுறை
மூலவர் : ஸ்ரீஆபதுத்தாரண ஆஞ்சநேய ஸ்வாமி
ஆக்கம் : ஸ்ரீவைகாநஸ ஆகமம்
முகவரி : ஸ்ரீஆபதுத்தாரண ஆஞ்சநேயஸ்வாமி
திருக்கோயில்,
ரயிலடி, மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம். திறக்கும் நேரம் : தினந்தோறும் காலை 8.00 மணி முதல்
11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சனிக்கிழமை மற்றும் அமாவாசை
காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை ஸ்தலவரலாறு குறுகிய 100 ஆண்டுகளுக்கு மேலாக தற்பொழுது ஆஞ்சநேய
ஸ்வாமி இருக்கக்கூடிய இடத்தில் கதளிவனம் (வாழை மரங்கள்)
இருந்தது. இதில் பல ஆண்டுகளாக வானரம் ஒன்று சஞ்சாரம் செய்தது.
அந்த வானரம் எந்த மனிதரையும் பயமுர்த்தலோ, தொந்தரவோ
செய்யாமல், வாழை பழங்களை தின்று கொண்டு ஒரே இடத்தில்
அமைதியாக அமர்ந்திருந்தது. அதை பார்த்த பலரும் இது
சதாசர்வகாலமும் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதாக எண்ணி
தினந்தோறும் வணங்கி சென்றனர்.
குறிப்பிட்ட ஆண்டில் பங்குனி மாதம் ஏகாதசி திதியில் அந்த
வானரம் இயற்கை எய்தியது. அந்த வானரத்தை அந்த கதளி வனத்திலே
புதைத்து ஏகாதசி திதியில் இறந்து போனதால் இது ஹனுமான் என்று எண்ணி வணங்கி வந்தனர். சில நாட்களிலேயே அந்த வானரம்
M.K.வீரராச்சாமி நாயுடு என்பவர் கனவில் சென்று என்னை வைத்த
இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறியது. இதனைத்
தொடர்ந்து அந்த இடத்தில் மக்களால் கோயில் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து மக்கள் அவரை வழிபட்டு வந்திருந்தனர். அவரிடம் வரும்
பக்தர்களின் ஆபத்துகளை தொடர்ந்து நிவர்த்தி செய்து வந்தார்.
அதனால் ஆலய அர்ச்சகரால் "ஆபதுத்தாரணன்" என்ற பெயரால்
அழைக்கப்பட்டார். "ஆபதுத்தாரணன்” என்ற இந்த பெயர் இராமாயண
காலத்தில் விபிஷணணரால் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வைக்கப்பட்டது.
இராமாயண காலத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி கடல் கடந்து, இலங்கை
சென்று, சீதையை கண்டு, "கண்டேன் சீதையை” என்று இராமபிரான்
பாதத்தை சரண் அடைந்தார். இராமபிரான் ஆஞ்சநேய ஸ்வாமி
உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணணை
வென்று சீதையை மீட்டு மகிழ்ச்சியுடன் அயோத்தி புறப்படத்தயார்
ஆனார். இராவணனின் தமையன் விபிஷணன் இராமபிரானிடம் இராமா
இந்த இராவணயுத்தம் நடந்து "சீத இராமனின்" ஆபத்தை போக்கி நம்
அனைவரையும் மகிழ்ச்சியுடன் இங்கு ஒன்று சேர்த்து அமரவைத்தவர்
இந்த ஆஞ்சநேயர்தான்.
ஆகையால் இந்த உலகில் அனைவருக்கும் வரக்கூடிய
ஆபத்துகளை தீர்ப்பவனாக இருக்கக்கூடிய இந்த ஆஞ்சநேயனை
"ஆபதுத்தாரண ஆஞ்சநேயர்” என்று அழைப்போம் மேலும் யார் ஒருவர்
இவரை நினைத்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இவரது கோயிலில்
ராம நாமத்தை கூறி ஸ்தோதரித்து வழிபடுகிறாரோ அவர்கள் வாழ்வில்
எல்லா ஆபத்துகளில் இருந்தும் காத்து சகல மங்களத்தையும் அவர்கள்
வாழ்வில் தந்தருள்வார் என்று உன் முன்னிலையில் “ஆஞ்சநேயரை"
வாழ்த்தி வணங்குகிறேன் என்று விபிஷணனால் வணங்கப்பட்டவர்
" ஸ்ரீ ஆபதுத்தாரண ஆஞ்சநேயர்”.
ஸ்வாமியின் தோற்றம்
பதுமத்திர் நின்ற திருக்கோலம்!
பூரித்த மார்பு!
அஞ்சளிவந்தணமானஹத்தம்!
அருள்பாலிக்கும் திருமுகமண்டலம்!
சதா சர்வ காலமும் ராமநாமத்தையும் பக்தர்களின்
கோரிக்கைகளையும் கேட்டு அருள் பாலிப்பதற்காக வாலின் நுனி
பாகத்தில் உள்ள சம்தபம் எழுப்பக் கூடிய மணியை தனது சிரசின் மேல்
கிரீடமாக வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
இந்த அழகிய தோற்றம் உடைய ஆஞ்சநேய ஸ்வாமியின்
ஆலயத்தில் நாள்தோறும் மக்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த
கோயில் பக்தர்களின் வசதிக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தருணத்தில் பக்தர்களால் எழுதி தரப்பட்டுள்ள பலகோடி இராம
நாமங்கள் ஆஞ்சநேய ஸ்வாமியின் இடத்தில் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
கோயில் ஆரம்ப காலம் முதல் இன்று வரை தமிழ்நாடு இந்து
சமய அறநிலையத்துறை (தமிழ்நாடு அரசு) திருக்கோயிலை
செம்மையான முறையில் நிர்வகித்து வருகிறது.
விழாக்கள்:
மார்கழி அமாவாசை அனுமன்ஜெயந்தி
10 நாட்கள் கர்போ உற்சவம்
நடைபெறுகிறது.
தோற்றக் குறிப்பு:
திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு,
நேராக இருக்கும் பேடி ஆஞ்சநேயர்
இருப்பது போல இவரது திருஉருவமும் அமைந்துள்ளது.