இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானி
இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானி (ரஹிமஹுலலாஹ்) (ஹிஜ்ரி' 1132/கி.பி.1914 - 1420/கி.பி.1999)
அல்பேனியா நாட்டின் ஷ்கூடர் நகரில் பிறந்த சமயம், அங்கு நாத்திகத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவரின் குடும்பம் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸிற்கு ஹிஜ்ரத் செய்தது.
தந்தை நூஹ் நஜாத்தி, மகனைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பாமல் தாமே வீட்டில் வைத்து குர்ஆன் தஜ்வீது, அரபு இலக்கணம், ஹனஃபி மத்ஹபு சட்டங்களைக் கற்றுக்கொடுத்தார். துருக்கி நாட்டு இஸ்தான்புல் நகர கல்விக்கூடங்களில் படித்த மேதை அவர். கடிகாரம் பழுது பார்க்கிற தொழிலும் தெரிந்தவர். மகனுக்கு அதையும் கற்றுக் கொடுத்தார்.
முஹம்மது நாசிருத்தீன்(ரஹ்) கடிகாரங்கள் பழுது பார்த்தார்கள், அதில் திறமைசாலி, பிரபலம் ன்றாலும், "குடும்பத்தைக் காக்க தினமும் மூன்று மணி நேரமே இத்தொழிலைச் செய்தேன் மீதி நேரங்களை நபிமொழிகளைப் படிப்பதற்குச் செலவிட்டேன், ளாஹிரிய்யா நூலகத் தில் சுமார் 6 முதல் 8 மணி நேரங்கள் செலவிட்டேன் " என்கிறார்கள்
சில சமயங்களில் கடையை மூடிவிட்டு நாள் முழுதும் நூலகத்தில் இருப்பார்கள். தொழுகைக்காக மட்டுமே எழுவார்கள். இவரின் படிப்பார்த்தைப் பார்த்து இவரிடமும் ஒரு சாவியை தந்துவிட்டார் நூலகர். ஆய்வுப் பணிக்காகத் தனி அறையையும் ஒதுக்கித்தந்தார்
இமாம் தம் இருபதாவது வயதில் ஹதீஸ் துறை ஆராய்ச்சியில் ஈர்க்கப்பட்டார்கள். அறிஞர்கள் பலரிடமும் கல்வி தேடினார்கள். வறுமையின் காரணமாகப் புதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்க இயலாததால், புத்தகக் கடைகளில் இலவசமாகப் பெற்றுப் படித்துவிட்டுத் திரும்பக் கொடுப்பார்கள். கடைக்காரர்களும் பெருந்தன்மையுடன் உதவுவார்கள்.
இமாமவர்களின் ஆய்வுப் புத்தகங்கள் அச்சாகி வெளியுலகுக்கு வரத்தொடங்கியவுடன், அவர்களிடம் கல்வி தேடி சிரியா, ஜோர்டானைச் சேர்ந்த மாணவர்கள் வந்தார்கள் அப்போது மதீனா பல்கலைக் கழகத் தலைவர் ஷெய்க் முஹம்மது இப்னு இப்றாஹீம் ஆலு ஷெய்க்(ரஹ்), இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு அழைத்தார்கள்
இமாமவர்கள் அங்கு ஹதீஸ் துறையைக் கற்றுத் தரும் தனிப்பிரிவைத் தொடங்கினார்கள். வரலாற்றில் முதன் முறையாக அப்போதுதான் ஹதீஸ் துறை பல்கலைக் கழகப் பாடமாக ஆனது மூன்று வருடங்கள், ஹஜ்ரீ 1381 முதல் 1383 வரை பணியாற்றினார்கள்
பிறகு திரும்பவும் டமாஸ்கஸ் வந்து தமது ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் டமாஸ்கஸிலே கல்வி போதித்தார்கள். அதோடு, பல நாடுகளுக்கும் பயணம் செய்து கல்வியைப் பரப்பினார்கள்
ஹதீஸ்களைத் தேடி ஆராய்ந்து, அவற்றில் ஸஹீஹ் எவை, ளயீஃப் எவை என்பதை விளக்கினார்கள் இப்பணியில் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள் நூறுக்கும் அதிகமான நூல்களை எழுதினார்கள், அவற்றில் பெரும்பாலானவை பெரும் பெரும் தொகுதிகளாக அமைந்தவை.
இமாமவர்கள் ஹதீஸ்களை அறிவிப்பதில் இரண்டு அறிஞர்களிடம் சனது அங்கீகாரம் (இஜாஸா) பெற்றிருந்தார்கள் ஷெய்க் முஹம்மது ராஹீப் அத்தப்பாக்(ரஹ்) அவர்களிடம் தாம் இஜாஸா பெற்றிருப்பது குறித்து முக்தஸர் அல் உலுல் (பக் 72) நூலின் முன்னுரையிலும், தஸ்தர் அஸ்ஸாஜிதின் (பக் 63) அடிக்குறிப்பிலும் சொல்லியுள்ளார்கள்
மற்றோர் அறிஞர் ஷெய்க் பகுஜதுல் பைத்தார்(ரஹ்) அவர்களிடமும் இஜாஸா பெற்றதாக ஹயாத்துல் அல்பானீ நூலில் முஹம்மது அஷ்வையானீ(ரஹ்) எழுதியுள்ளார்கள். இந்த இஜாஸா இமாம் அஹ்மது அவர்களையும், இறுதியில் நபி 95 அவர்கள் வரை அடைகிறது.
அறுபது ஆண்டுகளாக ஹதீஸ் துறைக்குச் சேவை செய்து, முப்பதாயிரத்திற்கும் அதிகமான அறிவிப்பாளர் தொடர்களின் (இஸ்னாது) தரங்களைத் தெளிவுபடுத்திய இம்மாமேதை பற்றி சஊதியின் பேரறிஞர் இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ்(ரஹ்) சொன்ன வார்த்தையே இங்கே இறுதி வார்த்தைகள் :
"இந்த நவீன உலகில் வானத்திற்குக் கீழே அல் பேனியா தேசத்து இமாம் முஹம்மது நாசிருத்தீன் அவர்களை விட ஹதீஸ் துறையில் அதிக ஞானமுடையவரை நான் பார்க்கவில்லை"
-வஸ்ஸலாம்