பயிர்க்குழுமத்தில் தானியங்கள், சிறு தானியங்கள் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பயிர்களை அடையாளம் காணுதல் பயிர் அடையாளம் : அடையாளம் காண்பது ஒரு கலை. இதன்மூலம் தேவையற்றத் தாவரங்களை பயிரிடப்பட்ட பகுதியிலிருந்து பிரிக்கலாம். பயிர் வயலில் இத்தகைய செடிகள் இருப்பது பெரும்பாலும் இடம், ஒளி, சத்துகள் போன்றவற்றுக்கு கடுமையான போட்டியை விளைவிப்பதோடு விளைபொருளின் தரம் பாதிக்கப்படுகிறது. சில கலை நாற்றுகள் மற்றும் பிறவகை தாவரங்கள், அதைப்போன்றே உள்ள பயிர்களில் அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒற்றுமை உள்ளது. எனவே, பயிர்களின் சுத்தமான சாகுபடிக்கு பயிர்செடிகள் பிற வகை தாவரங்கள் மற்றும் களைகளின் உருவவியல் தன்மைகளை அறிந்து கொள்வது அவசியம்.

                 அதே போல் பயிர்தீர்ப்பு  என்பது பயிர் வகைகளின் மகசூல் திறன், புதிதாக உருவான பல்வேறு வகைகளின் தகவமைப்பு, நோய்களை எதிர்க்கும் நிறன் ஆகியவற்றை மதிப்பிடக்கூடிய ஒரு சாதனம் ஆகும். எனவே கொடுக்கப்பட்ட வேளாண் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற தாவர வகைகளைத் தேர்ந்தெடுக்க இது உதவுகிறது.

1.தானியப் பயிர்கள் : அவை உண்ணக்கூடிய மாவுச்சத்து நிறைந்த தானியங்களுக்காக வளர்க்கப்படும் புல்வகையினம் ஆகும். 'செரெல்' என்ற சொல் ' செரெஸ்' என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இது ரோமானியர்களால் நம்பப்பட்ட தானியங்களை வழங்கும் தெய்வத்தை குறிக்கிறது.

                               1.அரிசி / நெய் - ஒரிசா சாடிவா
                               2.கோதுமை - ட்ரிடிகம் ஏஸ்டிவம், ட்ரிடிகம் வல்கேரிஸ்
                               (ரொட்டி கோதுமை)
                                மக்கரோனி கோதுமை - ட்ரிடிகம் ட்யூரம்
                                எம்மர் கோதுமை - டி. டைகோகம் (மைசூர் மற்றும் நீலகிரி)
                              3.மக்காச்சோளம் அல்லது சோளம் - ஜியா மேஸ்
                              4.வாற்கோதுமை -ஹார்டியம் வல்கரே
                              5.கம்பு (ரை) - சீகேல் சீரியல்
                              6. ஓட்ஸ்- அவீனா சாடிவா

2. தினை பயிர்கள்:

            அவை தானியங்களின் வருடாந்திர புற்களாகும். ஆனால் அவை குறைந்த / குறைவான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வளர்க்கப்படுகின்றன. அதன் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரம் ஆகியவை குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை ஏழை நாடுகளின் மக்களுக்கு முக்கிய உணவாகும். இந்தியாவில் கமீபு ராஜஸ்தானில் ஒரு முக்கியமான உணவு.
                                   * பெரிய தினை
                                   *சிறு தினை

இது பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் தானிய அளவை அடிப்படையாகக் கொண்டது. (a). முக்கிய தினைகள்:

      1.சோறு / சோளம் | ஜோவர் (பெரிய தினை) : சொர்கம் பைகலர்
      2.கம்பு / பாஜ்ரா / பியர்ல் மில்லட் : பென்னிசெடம் கிளாக்கம்
      3. கேழ்வரகு / ஃபிங்கர் மில்லட் : எலியூசின் கோரகானா

(b).சிறிய தினைகள்:

      1.தினை ( இத்தாலிய தினை /ஃபாக்ஸ்டெயில் தினை) : செடாரியா
         இத்தாலிகா
      2. சாமை( சிறிய தினை ) - பானிகம் மிலியேர்
      3.குதிரைவாலி (பான்யார்ட் தினை) - எகினோக்லோவா கொலோனா
     4.வரகு (கோடோ நினை) - பாஸ்பலும் ஸ்ரோபிகுலேடம்

பருப்பு பயிர்கள் :

       * தானியங்களைக் கொண்ட உறை பொருளாதாரப் பகுதியாகும். 
       * புரதச் சத்துக்கு உகந்த பருப்பு வகைகள்
       *பயிரிடும் முறையிலும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை
       *பசுமை உரம்
       * அதிக மதிப்புள்ள கால்நடை தீவனம்
       *காய்கறிகளாக பயன்படுத்தப்படும் பச்சை காய்கள் 
         எ.கா:காராமணி, அவரை...
      *பருப்புகளின் விதை உறை சத்துள்ள கால்நடை தீவனம்
      * கழிவுகள் அல்லது தண்டு 'ஹால்ம்' அல்லது ஸ்டவர் என்று அழைக்கப்படுகிறது.
     *மண்ணை வளப்படுத்தவும், மீதமுள்ள ஈரப்பதத்தை பயன்
       படுத்தவும் இது பயிரிடப்படுகிறது.
     *குறுகிய காலத்தில் வருவாய் கிடைக்கும்
               துவரை-கஜானஸ் கஜான்
               உளுந்து - விக்னா முங்கோ 
               பாசிப்பயறு- விக்னா ரேடியேடா
               கொண்டைக் கடலை - சீசர் எரீட்டினம்
               தட்டைப்பயறு ( காராமணி -விகீனா உங்கிக்குலேடா)
               கொள்ளு - மேக்ரோடிலோமா யூனிஃப்ளோரம்
                சோயா மொச்சை- க்ளைசின் மேக்ஸ்
                 பட்டானி - பைசம் ஸாடிவம் 
                 அவரை - டாலிகாஸ் லப்லப்
                  டிவ் கிராம்-ஃபேசியோலஸ் அகோனிடிஃபோலியஸ்
                 லென்டிசெல்ஸ்- லென்ஸ் க்யூலினாறில்
                  பிரெஞ்சு பீன் - ஃபேசியோலஸ் வல்காரிஸ்
                   புல் பட்டாணி - லாத்திரஸ் சாட்டிவஸ்

எண்ணெய்வித்து தாவரங்கள்:

எண்ணெய்க்காக வளர்க்கப்படும் பயிர்கள். இதில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்.

      நிலக்கடலை / வேர்கடலை - அராகிஸ் ஹைபோகியா
      எள்-செசேமம் இண்டிகம்
      சூரியகாந்தி - ஹெலியான்தஸ் ஏனஸ்
     ஆமணக்கு - ரிசினஸ் கம்யூனிஸ்
       ஆளி விதை - வினம் உசிட்டாடிசிமம்
       நைஜர்-கைசோஸியா அபிசினியா
       குங்குமப்பூ கார்தமஸ் டின்க்டோரியஸ் 
       சோயாமொச்சை- க்ளைசின் மேக்ஸ்
       இந்திய கடுகு - ப்ரேசிகா ஜன்சியா
       கருப்பு கடுகு - ப்ரேசிகா நிக்ரா
       வெள்ளை கடுகு - ப்ரேசிகா அலீபா பி.ஹிர்டா
        மஞ்சள் சார்சன் - பி.கம்பெஸ்டீறிஸ்,வார். சார்சன்
        பிரவுன் சார்சன் - ரி. கம்பெஸ்ட்றிஸ், வார்.பைகலர்
       டோரியா - பி. கம்பெஸ்ட்றிஸ், வார்.டோரியா