தமிழ்மொழி ஒன்று தான், வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையை அகம், புறம், என இருவகைப்படுத்தி இலக்கணங்களை கொண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு. வாழ்வுக்கே இலக்கணம் வகுத்த வண்டமிழ் மொழியில், பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் வளமான இலக்கியங்களுக்கு குறைவில்லை.