தெலுங்கு விஸ்வகர்ம குலத்தை சேர்ந்த விஜய் செல்வன் ஆகிய நான் என் அனுபவங்களையும் என் சமுதாய பணிகளையும் இதில் ஒளிவு மறைவில்லாமல் எழுதுகிறேன்.1). வம்சாவழி.என்முன்னோர்கள் விஜய் நகர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள்.எள்ளுதாத்தா ராமசாமிஆச்சாரி,கொள்ளு தாத்தா திருவேங்கடம் ஆச்சாரி,தாத்தா வெங்கடாசலம் ஆச்சாரி இவர்கள் பொள்ளாச்சி ஆனைமலை சுற்று வட்டார த்தில் வசித்தவர்கள்.கொள்ளுவேலையும் பொன்வேலையும் செய்தவர்கள்.தாத்தா காலத்தில் ஆனைமலையிலிருந்து தன் மகன்களின் படிப்புக்காக ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்தம் மனைவி குடும்பத்தினர்களால், ஈரோடு குடிபெயர்ந்தனர்.என் அப்பா முத்துக்கிருஷ்ணன் முதல் பையன்,அடுத்ததாக சுப்ரமணியன்,சேலம் அத்தை,விசாலு அத்தை, சூலூர் அத்தை,கொமாரசாமி,தியாகராஜன்,தெய்வசிகாமணி.