மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்.

நமது வாழ்க்கை ஒரு வரலாறு ஆக வேண்டும். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் இயற்கையாய் படைக்கப்பட்ட யாருக்கும் சொந்தம் கிடையாது.நட்பு மிகு பாசமிகு சகோதர ருடன் வாழ்ந்த மிகப் பெரிய தலைவர்கள் சுயநலமின்றி இந்த நாட்டிற்காக உழைத்து பாடுபட்டு வாழ்ந்தனர் அந்த வாழ்க்கை நாமும் வாழ வேண்டுமென்றால் நமது ஒவ்வொரு மனிதனும் தனி ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும்..தனி ஒழுக்கம் ஒவ்வொருவரும் கடைபிடிக்கும் போது இந்த உலகத்தில் அனைவரும் சுத்தமாய் தூயவனாக ஏற்கப்படும் ஜாதி மதம் இனம் மொழி என பல்வேறு வகைகளில் மாறுபட்டு இருந்தாலும் மனிதன் என்ற ஒரே நேர்கோட்டில் அனைவரும் சமம் என்று தனக்காக உழைத்துக் கொண்டிருந்த அவன் நாளை தனது தலைமுறைக்காக பணம் சம்பாதிக்க நினைக்கும் போது தான் போட்டி பொறாமை பண பிரச்சனைகள் வந்து இந்த உலகத்தில் போர் மூண்டது.தனக்கு போதும் என்று சொல்பவன் இறைவனுக்கு சமமானவன் என்று கருதப்படுகிறது அந்த இறைவன் மனிதனின் குழந்தை வடிவில் காணலாம். குழந்தை பிறக்கும் போது எவ்வாறு எல்லாம் இருக்கிறதோ அதேபோல் இறக்கும்போதும் எதுவும் இல்லாமல் இருக்கிறான் மனிதன்.இந்த கட்டுரை மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால் அன்பு சமாதானம் சகோதரத்துவம் உடன் அனைவரும் வாழ வேண்டும். இப்படிக்கு தென்றலாய் கணேசன் சரவண பெருமாள் .