வண்ணார் சலவை குறிகள்
வெயிலுக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஓதுங்காத விஞ்ஞானி தான் கண்டறிந்த அழியா மையினால் புள்ளிகளையும் கோடுகளையும் மாற்றிமாற்றி குறிகளிட்டு துணிகளை அடையாளப்படுத்துகிறார் மாண்டரின் போலிகள் லாஜிக்கில் அடங்காது மொழி வல்லுநரால் வாசிக்க இயலாது கணினி வல்லுநரால் டிகோடிங் செய்ய முடியாது பரம்பரையாக தொடரும் குடும்ப ரகசியம்